Enable Javscript for better performance
என்.ஐ.டி. பிரக்யான் விழாவில் தொழில்நுட்ப போட்டிகள் தொடங்கின- Dinamani

சுடச்சுட

    

    என்.ஐ.டி. பிரக்யான் விழாவில் தொழில்நுட்ப போட்டிகள் தொடங்கின

    By DIN  |   Published on : 04th March 2017 06:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி என்.ஐ.டி.யில் நடைபெற்று வரும் பிரக்யான் விழாவில் தொழில்நுட்பப் போட்டிகளும், தொழில்நுட்பக் கண்காட்சியும் வெள்ளிக்கிழமை தொடங்கின.
    டெக்சாஸ் இன்ஸ்ட்ருமன்ட்ஸ் சர்க்யூட்ரிக்ஸ் தொழில்நுட்பப் போட்டியில் சிக்கல்களை மின்சுற்றுகளைக் கொண்டு சரிசெய்தல் போட்டி நடைபெற்றது. இதில் இணையதளம் வழியாக 40 அணிகள் பங்கேற்றன. வெற்றி பெற்றவர்கள் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
    ஹோவர்கிராஃப்ட் போட்டி: என்.ஐ.டியின் விண்கல கட்டமைப்பு குழுவினரால் ஹோவர்ஒன் என்ற தலைப்பில் ஹோவர்கிராஃப்ட் போட்டி தொடங்கப்பட்டது. இதில் 185 குழுக்களாக கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர். தொடர்ந்து சனிக்கிழமை அடுத்தகட்ட தேர்வும், எழுத்துத் தேர்வும் நடத்தப்பட உள்ளது.  இதேபோல, இணையம் வழியாக போஸ்ட்டர் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளும் தொடங்கின.
    தொழில்நுட்ப கண்காட்சி:
    பிரக்யானில் என்.ஐ.டி. மாணவர்கள் மற்றும் பிற கல்லூரி மாணவர்கள் பங்கேற்கும் சங்கம், இஞ்சினியம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இக்கண்காட்சிகளில் என்.ஐ.டி. மாணவர்கள் 20 அரங்கங்களையும், மற்ற கல்லூரி மாணவர்கள் 11 அரங்கங்களையும் அமைத்திருந்தனர்.
    இதில் இயந்திர மனிதன், மாற்றுத்திறனாளிகள் உபயோகத்துக்கான சைக்கிள், தள்ளுவண்டிகள், கட்டுமானத் துறை சார்பில் குறைந்த செலவில் தரமான கட்டுமானங்கள், சைகையை ஒலி ஆற்றலாக மாற்றும் கையுறைகள் இடம்பெற்றிருந்தன.
    தொடர்ந்து வெள்ளிக்கிழமை வரை போட்டிகளும், கண்காட்சியும் நடைபெற உள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai