Enable Javscript for better performance
"நவீனமயமாகி வருகிறது அச்சுத் துறை'- Dinamani

சுடச்சுட

    

    அச்சகத் துறையில் நிலவும் போட்டிகளை சமாளிக்கும் வகையில், இந்தத் துறையில் நவீன தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகிறது என்றார் அகில இந்திய மாஸ்டர் பிரிண்டர்ஸ் கூட்டமைப்பு தலைவர் கமல்சோப்ரா.
    மாவட்ட பிரிண்டர்ஸ் அசோசியேஷன் சார்பில், திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அச்சகத்தினருக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று அவர் மேலும் பேசியது:
    உலகிலேயே மிகப்பெரிய பிரிண்டர்ஸ் அசோசியேசனாக திகழும் இந்த அமைப்பில் சுமார் 2.50 லட்சம் பேர் (அச்சகத்தார்) உறுப்பினர்களாக உள்ளனர். கடந்த 1953-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த சங்கம் இந்தியாவில் மொத்தம் 72 மண்டலங்களில் செயல்பட்டு வருகிறது.
    முக்கியமாக அச்சகத் துறையின் சாதனைகளை விளக்குவதுடன், அச்சகதாரர்களை ஊக்கப்படுத்தும் வகையில் தொழில்நுட்பக் கருத்தரங்குகள் நடத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. எனவேதான், அச்சுத் துறை சார்ந்த நவீன தொழில்நுட்பங்கள் கருத்தரங்குகள் மூலம் அவ்வப்போது தெரிவிக்கப்பட்டு வருகிறது.
    சென்னை, மும்பை உள்ளிட்ட மெட்ரோ நகரங்களில் கண்காட்சிகள் நடத்துவதோடு, சிறந்த அச்சகதாரர்களை தேர்வு செய்து அவர்களுக்கு ஆண்டுதோறும் விருதுகளும் வழங்கப்படுகிறது. எதிர்காலத்தில் திருச்சி போன்ற நகரங்களில் கண்காட்சிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    ஆப்செட் பிரிண்டிங் முறையில் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் வர இருக்கின்றன. அதை பாதுகாப்பாக பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்தும், பிரிண்டிங் துறையில் நிலவும் போட்டிகளை சமாளிப்பது குறித்த ஆலோசனைகளும் வழங்கப்படும் என்றார்.
    நிகழ்ச்சியில், பிரதீப் கைசாஸ் என்பவர் பாதுகாப்பான பிரிண்டிங் முறை குறித்தும், கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகப் பேராசிரியர் லட்சுமி ப்ரியா பிரிண்டிங் தொழிலில் கம்ப்யூட்டர் டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் குறித்தும், சென்னை, பிரெஸ்மேன் சொலூஷன் நிறுவன நிர்வாக இயக்குநர் பந்தளசெல்வம் தரமான அச்சுக்கலை குறித்தும், ஆறாம் திணை-டாக்டர் கு. சிவராமன் ஆரோக்கிய வாழ்வு குறித்தும், கல்வித் துறையில் அதன் பயன்பாடு பற்றியும் விளக்கம் அளித்தனர்.
    மேலும் சிறந்த அச்சகத்தார்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai