Enable Javscript for better performance
வாட் வரி உயர்வால் அத்தியாவசிய பொருள்கள் விலை உயர்வு- Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் வாட் வரி உயர்வால்தான் பெட்ரோல், டீசல், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ளன என்றார் பா.ஜ.க. மாநிலத் தலைவர் தமிழிசை.
    திருச்சியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் புறநகர் மற்றும் மாநகர் மாவட்ட செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
    கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளை பைசாக்கள் அடிப்படையில்தான் எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்துகின்றன. அதேபோல, விலைக்குறைப்பும் அறிவிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு இதுவரை 36 முறை விலைக்குறைப்பு செய்துள்ள நிலையில், தமிழகத்தில் ஒருமுறைகூட தமிழக அரசு விலைக்குறைப்பு செய்தது இல்லை.
    மேலும், தமிழகத்தில் வாட் வரி 27 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாக உயர்த்தியதன் விளைவாக தமிழகத்தில் மட்டுமே பெட்ரோல் ரூ. 3.78, டீசல் ரூ. 1.70 விலை அதிகரித்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இந்த உயர்வு கிடையாது. அத்துடன் தமிழகத்தில் தனியார் பால் விலையும் அதிகரித்துள்ளது. அரசு, பால்விலையை குறைக்காவிட்டாலும், தனியார் பால் விலையை முறைப்படுத்த வேண்டும்.
    மேலும், ரேசன்கடையில் உணவுப்பொருட்கள் கிடைப்பதில்லை என்ற புகார்கள் நீடித்து வருகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்வு, தனியார் பால்விலை உயர்வு, ரேசன்களில் உணவுப்பொருள் பற்றாக்குறை என மும்முனைத் தாக்குதல்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai