Enable Javscript for better performance
அரசு மருத்துவமனையில் தாய் - சேய் நல மையம் திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி அரசு மருத்துவமனையில் ரூ.20 கோடியில் கட்டப்பட்ட தாய் - சேய் நல சிகிச்சை மையத்தை தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார்.
    திருச்சி அரசு மருத்துவமனையில் பிரதானமாக இயங்கும் தாய் - சேய் நலப் பிரிவில் மாதத்துக்கு 1,500 பிரசவங்கள் வரை நடைபெறுகிறது. இப்பிரிவில் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப போதிய இடவசதி இல்லாததாலும், பிரசவிக்கும் தாய்மார்களுக்கும், பிறக்கும் குழந்தைகளுக்கும் மேம்படுத்தப்பட்ட சிகிச்சை அளிக்கும் நோக்குடனும் தமிழக அரசின் ரூ.20 கோடி நிதியுதவியில் மேம்படுத்தப்பட்ட தாய் - சேய் நல மைய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. 28,702 சதுர அடியில், தரைத்தளத்துடன் 3 மாடிகளுடன் கூடிய இக்கட்டடம் 300 படுக்கை வசதிகளைக் கொண்டது.
    இதில் அதிநவீன அறுவை சிகிச்சை அறைகள், ஸ்கேன் செய்யும் வசதி, மேம்படுத்தப்பட்ட ஆய்வகம், மருந்தகம், அவசர சிகிச்சை பிரிவு, பச்சிளங்குழந்தைகள் பிரிவு, குழந்தைகள் சிகிச்சை பிரிவு, உறவினர்கள் தங்கும் அறைகள், அறுவை சிகிச்சைக்குப் பின் தங்கும் அறை, பொது மருத்துவ அறைகள், மாணவர்களுக்கான அறைகள் உள்ளிட்டவையும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு 45 செவிலியர்கள் மற்றும் உதவியாளர்கள், 25 மருத்துவர்கள்  பணியில் இருப்பர்.
    இக்கட்டடத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஆட்சியர் கே.எஸ். பழனிசாமி, மருத்துவமனை முதல்வர் எஸ். மேரி லில்லி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai