சுடச்சுட

  

  சிறைக் காவலர்கள் மீது தாக்குதல்: கைதிகள் 3 பேர் மீது வழக்கு

  By DIN  |   Published on : 11th March 2017 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சி மத்திய சிறையில் காவலர்களை தாக்கிய கைதிகள் 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
  திருச்சி மத்திய சிறையில் இந்த மண்டலத்துக்கு உட்பட்ட 8 மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு வியாழக்கிழமை மாலை சிறை வளாகத்தில் அமைந்துள்ள காணொலிக்காட்சிக் கூடத்தில் (விடியோ கான்பரன்ஸ் அறை) கைதிகள் சிலர் நின்றிருந்தனர்.
  அப்போது, அந்த வழியாக ரோந்து வந்த சிறைக் காவலர்கள் தர்மராஜ், அருண்பாண்டியன் ஆகியோர் கைதிகளிடம் விசாரணைக்கு வருபவர்கள் தவிர மற்றவர்கள் இங்கு வரக்கூடாது, அதிலும் விசாரணை நேரம் தவிர மற்ற நேரத்தில் யாருமே வரக்கூடாது என அறிவுறுத்தியுள்ளனர்.
  அப்போது, கைதிகள் பெத்தபெருமாள், மணிகண்டன், பைசல்கான் ஆகியோர் காவலர்களிடம் தகராறு செய்துள்ளனர். இதையடுத்து ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது ஆத்திரமடைந்த கைதிகள் மூவரும் சேர்ந்ந்து சிறைக் காவலர்களை தாக்கியுள்ளனர்.
  இதுகுறித்து சிறை அலுவலர் (ஜெயிலர்) பூலோகஇந்திரன் கே.கே. நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன்பேரில், காவலர்களை தாக்கிய 3 பேர் மீதும் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai