சுடச்சுட

  

  மணப்பாறை அருகே ஜல்லிக்கட்டு: 285 காளைகள், 171 வீரர்கள் பங்கேற்பு

  By DIN  |   Published on : 11th March 2017 04:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகேயுள்ள கரடிப்பட்டியில் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 285 காளைகளும், 171 மாடுபிடி வீரர்களும் பங்கேற்றனர்.
  கரடிப்பட்டியில் ஸ்ரீ தொட்டியத்து சின்னையா சுவாமி ஆலய திடலில் 57-வது ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி. செந்தில்குமார் முன்னிலையில் நடைபெற்றது. திருச்சி, தஞ்சை, புதுகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த 285 காளைகள் ஜல்லிக்கட்டில் அனுமதிக்கப்பட்டன. அதேபோல, 171 மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க அனுமதிக்கப்பட்டனர். வாடிவாசல் வழியே சீறிப் பாய்ந்துவந்த காளையொன்றை யாராலும் அடக்க முடியவில்லை. ஆனால், அதன் உரிமையாளர் வீட்டு 10 வயது சிறுவன் வந்து காளையை அழைத்ததும், அந்த காளை சிறுவனுக்கு அடங்கிச் சென்ற சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. போட்டியை சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்டுகளித்தனர். காளையை அடக்கியவர்களுக்கும், அடங்காத காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசுகளாக வெள்ளிக்காசு, ரொக்கம், நாற்காலிகள், பாத்திரங்கள் உள்ளிட்டப் பொருட்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டன.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai