சுடச்சுட

  

  திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே சாமி தரிசனம் செய்ய வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர் மின்னல் தாக்கியதில் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். மேலும் 5 பேர் காயமடைந்தனர்.
  சிவகங்கை மாவட்டம், கோனாம்பட்டியைச் சேர்ந்தவர்கள் ஒரு வேனில் துவரங்குறிச்சி அருகேயுள்ள உடையான்பட்டிக்கு சாமி தரிசனம் செய்ய வந்தனர். வெள்ளிக்கிழமை மாலை திடீரென இடி மின்னல் காற்றுடன் மழை பெய்தது. இதையடுத்து, ஒரு குடிசை பகுதியில் அவர்கள் மழைக்கு ஒதுங்கினர். அப்போது, மின்னல் தாக்கியதில் அங்கு நின்ற 6 பேரும் பலத்த காயங்களுடன் மயக்கமடைந்தனர்.
  அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் பா. மலையாண்டி (80) என்ற முதியவர் உயிரிழந்தார். வள்ளி (34), அவரது கணவர் ராஜா (40) ஆகியோர் தனியார் மருத்துவமனையிலும், ஆண்டியம்மாள் (19), ராஜேந்திரன் (29), சித்ரா (23) ஆகியோர் மணப்பாறை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.
  சம்பவம் குறித்து துவரங்குறிச்சி போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai