சுடச்சுட

  

  திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் திருவிழாவையொட்டி போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  இதுகுறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் சார்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
  சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் திருவிழாவையொட்டி மார்ச் 12  (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 12 மணி முதல் மார்ச் 13 ஆம் தேதி பிற்பகல் 12 மணி வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
  திருச்சியிலிருந்து சேலம் மார்க்கமாக செல்லும் அனைத்து கனரக வாகனங்கள் மற்றும் புறநகர்ப் பேருந்துகளும்  சோதனைச்சாவடி எண் -7( குடமுருட்டி), ஜீயபுரம், பேட்டைவாய்த்தலை, குளித்தலை, முசிறி கைகாட்டி, தொட்டியம்,நாமக்கல் வழியாக  செல்ல வேண்டும். சேலத்திலிருந்து திருச்சி நோக்கி வரும் வாகனங்களும் இதே மார்க்கத்தில்  வர வேண்டும்.
  திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக (என்.எச்.45) சென்னை மார்க்கத்தில் செல்லும்
  கனரக வாகனங்கள், புறநகர்ப் பேருந்துகள் மணப்பாறை, ஆண்டவர் கோயில் சோதனைச்சாவடி வழியாக குளித்தலை, முசிறி பெரியார் பாலம், துறையூர், பெரம்பலூர் வழியாகச் செல்ல வேண்டும்.
  இதுபோல, தேசிய நெடுஞ்சாலை எண் 45 பி -மார்க்தத்தில் திருச்சி வழியாகச் சென்னை செல்லும் வாகனங்கள் லஞ்சமேடு கைகாட்டி, மணப்பாறை, ஆண்டவர்கோயில் சோதனைச்சாவடி, குளித்தலை, முசிறி பெரியார் பாலம், துறையூர், பெரம்பலூர் வழியாக
  செல்ல வேண்டும்.
  திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை மார்க்கங்களிலிருந்துசென்னை செல்லும் அனைத்து கனரக வாகனங்களும்  கொள்ளிடம் ஒய்-சாலை சந்திப்பு, கொள்ளிடம் ரவுண்டானா, நொச்சியம், மண்ணச்சநல்லூர், அய்யம்பாளையம், எதுமலை, திருப்பட்டூர் பிரிவு சாலை, சிறுகனூர் வழியாக சென்னை சாலையை அடைந்து செல்ல வேண்டும்.
  சென்னையிலிருந்து திருச்சிக்கு வரும் அனைத்து கனரக வாகனங்களும் பெரம்பலூர், அரியலூர், புள்ளம்பாடி, லால்குடி, கொள்ளிடம் ரவுண்டானா, கொள்ளிடம் புதியபாலம் வழியாக திருச்சி வந்தடைய வேண்டும்.
  சென்னை சாலை வழியாக திருச்சிக்கு வரும் அனைத்து கனரக வாகனங்களும் தச்சங்குறிச்சி, குமுளூர், பூவாளூர், லால்குடி, கொள்ளிடம் ரவுண்டானா, கொள்ளிடம் புதிய பாலம் வழியாக வர வேண்டும்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai