சுடச்சுட

  

  தமிழக ரயில்வே திட்டங்களுக்கு இருமடங்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு

  By DIN  |   Published on : 12th March 2017 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தமிழகத்தில்  ரயில்வே வளர்ச்சித் திட்டங்களுக்காக, மத்திய அரசு கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் கடந்தாண்டுகளில் வழங்கப்பட்டதைவிட இரு மடங்கு அதிமாக ரூ.2,300 கோடி அதிக நிதி ஒதுக்கியுள்ளது என்றார் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபாகர் பிரபு.

  திருச்சியில் சனிக்கிழமை நடைபெற்ற, திருச்சி பொன்மலையில் 2.13 கி.மீ. தொலைவுக்கு மெயின்லைன் மற்றும் கார்டு லைன் ரயில் பாதைகளை இணைக்கும் நிகழ்ச்சி, திருச்சி-நெல்லை வரை இயக்கப்பட்ட இண்டர்சிட்டி விரைவு ரயிலை திருவனந்தபுரம் வரையில் நீட்டிப்பது, விருத்தாசலம் ரயில் நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள முக்கிய பிரமுகர்கள் ஓய்வறை மற்றும் பயணிகள் ஓய்வறைகளை திறந்து வைப்பது,ரு. 105 கோடியில் விழுப்புரம் மற்றும் திருவெண்ணைநல்லூர் இடையே 16 கி. மீ  நீளத்துக்கு அமைக்கப்பட்ட மின்வசதியுடன் கூடிய 2-வது ரயில் பாதையை பயன்பாட்டுக்கு அர்ப்பணிப்பது உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர் காணொலி காட்சி மூலம் மேற்கண்ட திட்டங்களை தொடங்கி வைத்து மேலும் பேசியது:


  தமிழகத்தில் பொருளாதாரம், மகளிர் மேம்பாடு மற்றும் பின்தங்கிய வர்க்கத்தினருக்கான திட்டங்கள் உள்ளிட்ட அனைத்து துறைகளும் வளர்சி பெறும் விதமாக மத்திய அரசு பல்வேறு வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. ரயில்வே துறையை பொறுத்த மட்டில் கடந்த மூன்று ஆண்டுகளில் முந்தைய ஆண்டுகளில் வழங்கப்பட்ட ரூ.878 கோடி நிதியை விட மூன்று மடங்கு நிதி (சுமார் ரூ.2,300 கோடி) வழங்கியுள்ளது.

  எனவே ரயில்வே துறையைப் பொறுத்தவரையில் தமிழகம் நல்ல வளர்ச்சியை அடைந்து வருகின்றது. புதிய ரயில் பெட்டிகள், ஓய்வறைகள், பாதுகாப்பு, பயணிகள் நலன் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் தமிகத்துக்கு ஏராளமாக வழங்கப்பட்டுள்ளன. அதேபோல மேலும் பல புதிய திட்டங்களும் நிறைவேற்றப்பட உள்ளன. கடந்தவாரம் சென்னையில் நடைபெற்ற விழாவில் பல்வேறு திட்டங்கள் தொடங்கப்பட்டுள்ளன. விரைவில் கோவை - பெங்களூர் இடையிலும் புதிய ரயில் போக்குவரத்து தொடங்கப்படும். அதேபோல சென்னையிலிருந்து கடலூர், பாண்டிச்சேரி, நாகை வழியாக தூத்துக்குடிவரையில் கிழக்குக் கடற்கடரைச் சாலையில் புதிய ரயில் வழியும் அமைக்க திட்டமிடப்படும்.  

  ரயில்வே துறையில் வளர்ச்சித்திட்டங்களுக்கு ரூ. 8 லட்சத்து 50 ஆயிரம் கோடி தேவைப்படுகின்றது. இவற்றின் மூலம் தற்போது நடைபெற்று வரும் ரயில்வே இரட்டைப்பாதைகள், மின்மயம், பாதுகாப்பு, பயணிகள் நலன், உள்கட்டமைப்பு, புதிய ரயில்பாதைகள், ரயில்கள் என பல்வேறு திட்டங்கள் தற்போது நடந்துவருவதைப்போலவே இரு மடங்கு மேற்கொள்ளவேண்டிய நிலை உள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் இந்த திட்டங்கள் நிறைவேற்றம் அடையும்.

  மத்திய அரசு திட்டங்கள் மாநிலத்தில் நடைமுறைப்படுத்தும் போது மாநில அரசின் ஒத்துழைப்பும் மிக முக்கியம். தமிழகத்தைப் பொறுத்தவரையில் மாநில அரசு தற்போது உள்ளதைப்போல ஒருங்கிணைந்து செயல்பட்டால் மேலும் பல திட்டங்களை தமிழகம் பெறும் நிலை விரைவில் ஏற்படும். விரைவில் மத்திய அரசு அதிகாரிகள் மாநில அரசு அதிகாரிகள் மற்றும் செயலர்களை அணுகி திட்டங்கள் குறித்து விளக்கி நடைமுறைப்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai