Enable Javscript for better performance
திருச்சியில்  குதிரை வண்டி ஸ்டாண்ட் கட்ட கதாகாலட்சேபம் நடத்தி நிதி அளித்த கலைவாணர்- Dinamani

சுடச்சுட

    

    திருச்சியில்  குதிரை வண்டி ஸ்டாண்ட் கட்ட கதாகாலட்சேபம் நடத்தி நிதி அளித்த கலைவாணர்

    By DIN  |   Published on : 12th March 2017 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழ்த் திரைப்படத் துறையில் கலைவாணர் என்றழைக்கப்பட்ட என்.எஸ்.கிருஷ்ணன், நகைச்சுவை நடிகராக மட்டுமல்லாது, பாடகராகவும் திகழ்ந்தார். நகைச்சுவையில் சமூக சீர்த்திருத்தக் கருத்துக்களை உட்படுத்தி, சினிமா ரசிகர்களை சிரிக்கவைத்ததோடு மட்டுமல்லாமல், சிந்திக்க வைத்தவர்.
    “சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கு சொந்தமானது சிரிப்பு” என்ற பாடல் ஒன்றே என். எஸ். கலைவாணரின் நகைச்சுவைக் கலந்த சிந்தனைக்கு எடுத்துக்காட்டாகும். தமிழ் சுனிமா உலகில் நகைச்சுவைக்கென தனி பாணியை உருவாக்கிக் கொண்டு, பிறர் மனதைப் புண்படுத்தாமல் நகைச்சுவைகளைக் கையாண்ட அற்புதக் கலைஞன். தமிழில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே இணையற்ற நகைச்சுவை நடிகராக விளங்கியவர்கலைவாணர்.
    பல்வேறு சிறப்புகளைப் பெற்றிருந்த என்.எஸ்.கிருஷ்ணனுக்கு குதிரை மீது தனி அலாதி பிரியம் இருந்திருக்கிறது.உதாரணமாக, திருச்சி தென்னூரில் குதிரை வண்டி ஸ்டாண்ட் கட்டுவதற்காக கதாகாலட்சேபம் நடத்தியிருக்கிறார். மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் நூற்றுக்கால் மண்டபத்தில் கதாகாலட்சேபத்தை நடத்திய கிருஷ்ணன், அதில் வசூலான ரூ.1360-த்துடன்,  தன்னுடைய நன்கொடையாக ரூ.1640- ஐயும் சேர்த்து ரூ.3000-த்தை அன்றைய நகரசபைத் தலைவரிடம் வழங்கியிக்கிறார். மேலும்,  அந்த இடத்துக்குகிந்தனார் என்றும் பெயர் சூட்டியிருக்கிறார் கலைவாணர்.
    இதுபோல, திருச்சி புத்தூர் நான்குச் சாலை பகுதியில் என்.எஸ்.கிருஷ்ணனின் முயற்சியில் குதிரை வண்டி ஸ்டாண்ட் அமைக்கப்பட்டிருந்தது. நீண்ட காலமாக இருந்து வந்த இந்த ஸ்டாண்ட், மாநகர விரிவாக்கத்தில் கடந்த சில ஆண்டுகளுக்குசாலைகளைச் சீரமைத்தல் மற்றும் கட்டுமானப் பணியின் போது இந்த குதிரை வண்டி ஸ்டாண்ட்டும் இருந்த இடம் தெரியாமல் போனது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai