சுடச்சுட

  

  திருச்சி மாவட்டத்தில் 7 இடங்களில் மானியவிலை வைக்கோல்விற்பனை தொடக்கம்

  By DIN  |   Published on : 12th March 2017 01:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சி மாவட்டத்தில் 7 இடங்களில்  மானிய விலையில்வைக்கோல் (உலர் தீவனம்) விற்பனை சனிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.
  திருச்சி மாவட்டம், மணிகண்டத்தில் நடைபெற்ற விழாவில், மாநிலச் சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன், மாநில பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.வளர்மதி ஆகியோர் இந்த விற்பனையைத் தொடக்கி வைத்தனர்.
  இதைத்தொடர்ந்து அவர்கள் கூறியது:
  வறட்சி காரணமாக கால்நடைகளுக்கு ஏற்படும் தீவனப் பற்றாக்குறையை சரி செய்யும் வகையில், வறட்சி நிவாரணத் திட்டத்தின் கீழ் மாநிலத்தில் 300 இடங்களில் உலர் தீவன வைக்கோல் கிடங்குகள் நிறுவப்பட்டுள்ளன.
  இத்திட்டத்தின் கீழ் திருச்சி மாவட்டத்தில் தண்டலைப்புத்தூர், ஜடமங்கலம், நாகலாபுரம், மணிகண்டம், வளநாடு, மணப்பாறை, மண்ணச்சநல்லூர் ஆகிய 7 கால்நடை மருந்தகங்களிலும் உலர் தீவன கிடங்குகள் நிறுவனப்பட்டுள்ளன. தலா ரூ.18.50 லட்சம் செலவில்7 கிடங்குகள் அமைக்க ரூ.1.30 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  மானிய விலை வைக்கோல் கிலோ ரூ.2  வீதம் ஒரு கால்நடைக்கு தினமும் 3  கிலோ வீதமும், ஒரு விவசாயிக்கு அதிகபட்சமாக 5 கால்நடைகளுக்கும் வைக்கோல் வழங்கப்படும் என்றனர் அமைச்சர்கள்.
  இந்த நிகழ்வுக்கு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி தலைமை வகித்தார். கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குநர் டாக்டர் எஸ்.ராஜேந்திரன், துணை இயக்குநர் முருகேசன் உள்ளிட்டோர் நிகழ்வில் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai