சுடச்சுட

  

  திருச்சி மாவட்டம், புள்ளம்பாடியில் அதிகபட்சமாக 82.80 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.
  குமரிக்கடல் அருகே நிலை கொண்டிருந்த காற்றழுத்தத் தாழ்வுநிலையானது வலுவிழந்து காற்றின் மேலடுக்கு சுழற்சியாக மாறியுள்ளது. லட்சத்தீவு அருகே நிலை கொண்டிருந்த மேலடுக்கு சுழற்சி தெலங்கானாவில் நிலை கொண்டிருந்ததால்மாநிலத்தில் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருந்தது.
  வெள்ளிக்கிழமை காலை முதல் மாலை வரை வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில், மாலையில் திடீரென வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, இரவு 7.30 மணிக்கு மேல் இடி-மின்னலுடன் பெய்யத் தொடங்கிய மழை ஒரு மணி நேரத்துக்கும் மேலாகத் தொடர்ந்து பெய்தது.மாநகர் மற்றும் புறநகரின் பல்வேறு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக வெயிலின் தாக்கத்திலிருந்து மக்கள் சற்றுவிடுபட்டனர்.
  சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக புள்ளம்பாடியில் 82.80 மி.மீ. மழையும், குறைந்தளவாக திருச்சி விமான நிலையத்தில் 1.30 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
  மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மி.மீட்டரில்):
  புள்ளம்பாடி - 82.80 மி.மீ, கல்லக்குடி- 60.20, திருச்சி டவுன்- 49, தேவிமங்கலம்- 40, சமயபுரம்- 39, பொன்மலை- 35.80, துறையூர்- 35,  திருச்சி ஜங்ஷன்- 31.20,  நந்தியாற்றுத்தலைப்பு -23,  லால்குடி- 22.40, மருங்காபுரி- 22.20,வாய்த்தலை அணைக்கட்டு- 18, கோவில்பட்டி- 15.20, மணப்பாறை- 13.20, முசிறி, நவலூர் குட்டப்பட்டு- 7.20, தென்பறநாடு, பொன்னணியாறு அணை- 5, தாத்தையங்கார்பேட்டை- 2.50, கொப்பம்பட்டி- 2, திருச்சி விமான நிலையம்- 1.20 மி.மீ.
  மாவட்டத்தில் சராசரியாக 20.69 மி.மீ. மழையும், மொத்தமாக 517.20 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
  குடிநீர்ப் பிரச்னை: தற்போது பெய்திருக்கும் மழையால் நிலத்தடி நீர் மட்டம் சற்று உயர வாய்ப்பு உள்ளது. இதனால் குடிநீர்ப் பிரச்னைக்கு சற்று தீர்வு கிடைக்கும். மல்லிகை, ரோஜா, சம்பங்கி போன்ற பூக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இதுபோல உளுந்து வகை பயறுகளுக்கும் மழை பயன் தரும் என்றார் தமிழ் மாநில காங்கிரஸ் விவசாயப் பிரிவு மாநிலத்  தலைவர் புலியூர் ஏ.நாகராஜன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai