Enable Javscript for better performance
பேருந்தில் 16 பவுன் நகை மாயம்- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி சின்ன செட்டித் தெரு பகுதியைச் சேர்ந்த முகம்மது ஷரீப் மகன் முகம்மது சலீம் (47). இவர் வெளிநாட்டில் பணியாற்றி விட்டு திரும்பி வந்தவர். இவர் ராசிபுரத்தில் உள்ள தம்பியிடம் கொடுப்பதற்காக 16 பவுன் நகையை கைப்பையில் எடுத்துக் கொண்டு, துவரங்குறிச்சியிலிருந்து அரசுப் பேருந்தில் திங்கள்கிழமை பிற்பகல் திருச்சிக்கு வந்தார். திருச்சி மன்னார்புரம் அருகே பேருந்து வந்தபோது, கைப்பையில் இருந்த 16 பவுன் நகையை காணவில்லையாம்.
    இதுகுறித்து முகம்மது சலீம் அளித்த புகாரின் பேரில் கே.கே. நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai