சுடச்சுட

  

  கடவுச்சீட்டில் முறைகேடு செய்து, மலேசியா செல்ல முயன்ற தொண்டியைச் சேர்ந்தவரை திருச்சி விமான நிலையத்தில் போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
  திருச்சியிலிருந்து மலேசியா செல்வதற்காக மலிண்டோ ஏர்லைன்ஸ் விமானம் புதன்கிழமை காலை தயாராக நின்றிருந்தது.
  அதில் செல்லவிருந்த பயணிகளின் பயண ஆவணங்களை குடியேற்றப்பிரிவு போலீஸார் சோதனை செய்தனர். அப்போது ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி தெற்குத்தெருவைச் சேர்ந்த மு. ராவுத்தர் நைனாமுகமது (40) என்ற பயணி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்த காதர்அலி மகன் ஜாபர்அலி (40) என்ற பெயர் மற்றும் முகவரியில் முறைகேடு செய்து
  கடவுச்சீட்டு உள்ளிட்ட ஆவணங்களை எடுத்து பயணிக்கவிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கடவூச்சீட்டை பறிமுதல் செய்து ராவுத்தர் நைனாமுகமதுவை திருச்சி விமான நிலைய போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
  ரூ. 6 லட்சம் கரன்சி பறிமுதல்:
  திருச்சியிலிருந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மலேசியாவுக்கு கடத்த முயன்ற ரூ. 6 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
  ஏர்ஏசியா விமானத்தில் மலேசியாவுக்கு புறப்படத் தயாராக இருந்த பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். இதில் சென்னையைச் சேர்ந்த சையதுஆசிக், திருச்சியைச் சேர்ந்த காஜாமுகமது, தஞ்சையைச் சேர்ந்த ரஷியாபேகம், ஆகிய மூவரும் தங்களது உடைமைகளுக்குள் வைத்து இந்திய மதிப்பில் ரூ. 6 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை மறைத்து கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது. அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai