சுடச்சுட

    

    திருச்சி ஜங்ஷன் அருகில் உள்ள டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து ரூ.1.17 லட்சம் பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    திருச்சி ஜங்ஷன் அருகில் நான்கு சந்திப்பு சாலை அருகே அரசின் மதுபானக்கடை (டாஸ்மாக்) இயங்கி வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமை இரவு வழக்கம் போல் பணியை முடித்த ஊழியர்கள், பெட்டகத்தில் அன்றைய மது விற்பனை செய்த தொகையான ரூ.1.47 லட்சம் பணத்தை வைத்து பூட்டிவிட்டு சென்றனராம்.
    புதன்கிழமை பிற்பகலில் கடையை திறக்க வந்து போது, கடைக்கு அருகில் இருந்த பார் கதவின் பூட்டை உடைத்து, அதன் வழியாக டாஸ்மாக் கடைக்கு நுழைந்த மர்ம நபர்கள், பெட்டகத்தின் அடிப்பகுதியில் வைத்திருந்த ரூ.30 ஆயிரத்தை விட்டு விட்டு, ரூ.1.17 லட்சத்தை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து டாஸ்மாக் அலுவலர்கள் அளித்த புகாரின் பேரில், கண்டோன்மென்ட் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai