சுடச்சுட

    

    திருச்சி மேலப்புதூரில் போலீஸ் ரோந்து வாகனம் மோதியதில் தொழிலாளி ஒருவர் செவ்வாய்க்கிழமை இரவு உயிரிழந்தார்.
     திருச்சி முதலியார்சத்திரம் புதுத்தெருவைச் சேர்ந்தவர் ஜலந்தர் (55). இவர் மேலப்புதூரில் உள்ள கடையில் பணியாற்றி வருகிறார். செவ்வாய்க்கிழமை இரவு பணி முடிந்து, வீட்டுக்குச் செல்ல அப்பகுதியில் உள்ள சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது, தலைமை அஞ்சல் அலுவலகத்திலிருந்து மேலப்புதூர் நோக்கிச் சென்ற போலீஸ் ரோந்து வாகனத்தின் முன் பக்க டயர் வெடித்து, நடந்து சென்ற ஜலந்தர் மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த ஜலந்தரை, போலீஸாரும், பொதுமக்களும் மீட்டு ஆட்டோவில் திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்து, அவர் ஏற்கெனவே இறந்துவிட்டார் எனத் தெரிவித்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai