சுடச்சுட

    

    விமான நிலையத்தில் ரூ.13.57 லட்சம் மதிப்புள்ள தங்கம், மின்னணு சாதனங்கள் பறிமுதல்

    By DIN  |   Published on : 16th March 2017 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மலேசியா மற்றும் துபையிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 13.57 லட்சம் மதிப்புள்ள தங்கம் மற்றும் மின்னணு சாதனங்கள் உள்ளிட்டவற்றை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத்துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
    திருச்சி விமான நிலையத்தில் புதன்கிழமை சுங்கத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில், மலேசியாவிலிருந்து வந்திருந்த ஏர் ஏசியா விமானப் பயணிகளை சுங்கத்துறையினர் சோதனை செய்தனர். அப்போது புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்ற பயணி, ரூ. 8.67 லட்சம் மதிப்புள்ள 300 கிராம் தங்கக் கட்டிகளை கடத்தி வந்தது தெரியவந்தது.
    அதேபோல் துபையிலிருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் வந்த பயணிகளை பரிசோதித்தபோது, சென்னையைச் சேர்ந்த அபுதாகிர் என்ற பயணி இந்தியாவில் தடை செய்யப்பட்ட ரூ. 1.32 லட்சம் மதிப்புள்ள சிகரெட் வகைகள் 132 பொட்டலங்கள், உரிய அனுமதியின்றி ரூ. 3.58 லட்சம் மதிப்புள்ள சோனி நிறுவன மின்னணு சாதனங்கள் 6 ஆகியவற்றை தனது உடைமைகளுக்குள் மறைத்து கொண்டு வந்திருந்தார். அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ. 13.57 லட்சமாகும். இது குறித்து சுங்கத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai