சுடச்சுட

    

    மார்ச் 20-முதல் ஆட்சியரகங்கள் முன்பு காத்திருப்புப் போராட்டம்

    By DIN  |   Published on : 17th March 2017 05:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தமிழகம் முழுவதும் மார்ச் 20 ஆம் தேதி முதல் ஆட்சியரகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது,20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 14 ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கிய ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கத்தினர் மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
    திருச்சியில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டம் தொடர்பாக அரசுடன் நடந்த பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், சங்கத்தின் மாநிலச் செயலர் பழனியப்பன் அளித்த பேட்டி:
    வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அரசாணை 71-ன்படி ஊதியம் வழங்க வேண்டும். 12865 ஊராட்சி செயலர்களுக்கும் வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க  வேண்டும் என்பது உள்ளிட்ட 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது.
    பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை. எனவே, கோரிக்கைகளை அரசாணையாக பெறும் வரையில் போராட்டத்தை கைவிடப்போவதில்லை.வெள்ளிக்கிழமை மாவட்டத் தலைநகரங்களில் மறியல் போராட்டமும், வரும் 19ம் தேதி திருச்சியில் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டமும் கூடுகிறது. இதில், போராட்டம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. மார்ச் 20 முதல் அந்தந்த மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் என்றார் பழனியப்பன்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai