சுடச்சுட

    

    பெரம்பலூர் மாவட்டம், பொம்மநாயக்கன்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை மனைவி தேனருவி (40). இவரது மகன் திருச்சி பஞ்சப்பூரில் உள்ள கல்லூரியில் பயின்று வருகிறார். இதற்காக அப்பகுதியில் வீடு எடுத்துத் தங்கி, காந்திமார்க்கெட் பகுதியில் உள்ள உணவகத்தில் பாத்திரம் கழுவும் பணி செய்து வந்தார்.
    இந்நிலையில் வியாழக்கிழமை காலை பணிக்குச் செல்வதற்காக பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு வருவதற்காக திருச்சி - திண்டுக்கல் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த லாரி ஒன்று இவர் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த தேனருவியை அக்கம்பக்கத்தினர் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேனருவி இறந்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai