சுடச்சுட

  

  உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் பூச்சொரிதல் விழா: ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்

  By DIN  |   Published on : 18th March 2017 05:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற பூச்சொரிதல் விழாவில் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு பூக்களைச் சாத்தி வழிபட்டனர்.
  கல்வி, செல்வம், வீரம் மூன்றையும் வழங்கி உறையூரில் குடிகொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருபவர் வெக்காளியம்மன். இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடத்துவது வழக்கம். அப்போது. மாநகரத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் பூக்கூடைகளில் பூக்களை ஏந்தி வந்து அம்மனுக்கு சாற்றி வழிபடுவர்.
  நிகழாண்டுக்கான பூச்சொரிதல் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. காலையில் முதல் கால பூஜை முடிந்த பின்னர், கோயில் நிர்வாகத்தின் சார்பில் கோயில் உதவி ஆணையர் கோ. ஜயப்பிரியா மற்றும் கோயில் பணியாளர்கள் ஊர்வலமாக வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபாடு நடத்தினர்.
  இதைத்தொடர்ந்து, மற்றப் பகுதிகளிலிருந்து  பக்தர்கள் ரதங்களை வெக்காளியம்மனை அலங்கரித்து பூக்கூடைகளைக் கொண்டு வந்து அம்மனுக்கு சாற்றி வழிபாடு நடத்தினர்.
  உறையூர் வெக்காளியம்மன் கோயில் குடமுழுக்கு நடைபெற்று 11 ஆண்டுகள் மார்ச் 17 ஆம் தேதியன்று நிறைவு பெற்றதையொட்டி, பிற்பகல் 12 மணிக்கு அம்மனுக்கு சம்வத்சராபிஷேகம் மறறும் சிறப்புப் பூஜைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
  பக்தர்கள் பூச்சொரிதல் விழாவில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழமை இரவு விடிய விடிய கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai