Enable Javscript for better performance
சமயபுரம் தங்கும் விடுதியில் ஆட்டோ ஓட்டுநர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி உறையூர் மேலகல்நாயக்கன் தெருவைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (55).  ஆட்டோ ஓட்டுநரான இவர் மற்றொருவரின் ஆட்டோவை வாடகைக்கு எடுத்து ஓட்டி வந்துள்ளார். கடந்த 15-ஆம் தேதி வெளியூர் சென்று வருவதாக வீட்டில் கூறிவிட்டுச் சென்ற ராஜேந்திரன் வியாழக்கிழமை மதியம் சமயபுரம் வந்து நால்ரோடு பகுதியில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில், ராஜேந்திரன் நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியில் வராததால் சந்தேகம் அடைந்த சந்தேகமடைந்த விடுதி மேலாளர்  ராஜேந்திரன் தங்கியிருந்த அறைக்குச் சென்று பார்த்தபோது ராஜேந்திரன் இறந்து கிடந்தார்.   போலீஸார் விசாரணையில், ராஜேந்திரனுக்கு இருதய நோய் பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. மேலும், அவர் உடல் நலக்கோளாறால் இறந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்ததாக போலீஸார் கூறினர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai