சுடச்சுட

  

  திருவானைக்கா அருள்மிகு அகிலாண்டேஸ்வரி உடனுறை ஜம்புகேஸ்வரர் திருக்கோயில் பங்குனி திருத்தேரோட்டம் வரும் 28-ம் தேதி நடைபெறவுள்ளது.
  பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதத்தில் நடைபெறும் தேரோட்ட விழா விமரிசையாக கொண்டாடப்படும்.
  நிகழாண்டுக்கான இந்த விழா கடந்த 6-ம் தேதி பெரிய கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முதல் திருநாள் வரும் 23-ம் தேதி எட்டுத்திக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று சுவாமியும், அம்மனும் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பர். தொடரும் விழா நாள்களில் சுவாமியும், அம்மனும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர்.
  விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் வரும் 28-ம் தேதி நடைபெறுகிறது. இதில் சுவாமியும், அம்மனும் தனித்தனி தேரில் எழுந்தருளி, தேரோட்டம் அன்று காலை 6.30 மணிக்கு தொடங்குகிறது.
  மார்ச் 29-ம் தேதி சுவாமியும், அம்மனும் வெள்ளி மஞ்சத்திலும், 8-ம் திருநாளான 30-ம் தேதி சுவாமி வெள்ளிக் குதிரையிலும், அம்மன் பல்லக்கிலும், 9-ம் திருநாளான மார்ச் 31-ம் தேதி சுவாமி அதிகார நந்தியிலும், அம்மன் சேஷவாகனத்திலும், 10-ம் திருநாளான ஏப்ரல் 1-ம் தேதி சுவாமி நடராஜராகவும், அம்மன் வெள்ளை சாத்தியிலும் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதிக்கவுள்ளனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai