சுடச்சுட

  

  திருச்சியில் வெள்ளிக்கிழமை ரயிலில் அடிபட்டு தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்த பெண் உயிரிழந்தார்.
  தஞ்சை மாவட்டம் மாரனேரி காளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ராஜலிங்கம் மனைவி தமிழரசி (55). திருவெறும்பூர் வந்திருந்த இவர் வெள்ளிக்கிழமை காலை சோழகம்பட்டி பகுதியில் ரயில்பாதையைக் கடக்க முயன்றார். அப்போது எதிர்பாராத விதமாக எர்ணாகுளம் விரைவு ரயிலில் அடிபட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி தமிழரசி இறந்தார். இந்த சம்பவம் தொடர்பாக திருச்சி ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai