சுடச்சுட

  

  ’கல்வியும், அதனால் பெறும் அறிவும் நாட்டின் பெரும் செல்வங்கள்

  By DIN  |   Published on : 19th March 2017 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கல்வியும், அதனால் பெறும் அறிவும்தான் நாட்டின் பெரும் செல்வங்கள் என்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆர். மகாதேவன்.
  திருச்சி காவேரி மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 33-வது கல்லூரி தின விழாவில் பங்கேற்று மேலும் அவர் பேசியது:
  கலாசாரம், மொழியால் கிடைக்கும் பெருமை அளப்பரியது. உலகின் மற்றப் பகுதிகளில் இலக்கியங்கள் வளராத நிலையில், இலக்கியம், அரசியல் தத்துவார்த்தங்களில் தமிழகம் செழித்து விளங்கியிருக்கிறது. தமிழகத்தின் வரலாறு பெண்களைச் சார்ந்தே உள்ளது.
  கல்வியும், அதனால் பெறும் அறிவும்தான் நாட்டின் பெரும் செல்வங்கள். அறிவியல், தொழில்நுட்பம் உயர்ந்திருக்கும் இன்றைய சூழ்நிலையில், கலாசாரம், மொழி சார்ந்த விஷயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும்.
  தமிழகத்தில் தற்போதைய நிலையில் உயர் நீதிமன்றத்தில் பதிவாகும் வழக்குகளில் 60 சதவீதம் குற்றம் மற்றும் பெண்களுக்கு எதிரான வழக்குகளாகவே உள்ளன. இன்றைய இயந்திரமயமான வாழ்க்கையில், கல்லூரி, படிப்பு, அதற்கேற்ற வேலை என்பதோடு மாணவிகள் நின்றுவிடக்கூடாது. அறிவோடு சேர்ந்த வாழ்க்கையை தேடிச்செல்ல வேண்டும்.
  கல்வி, அதற்கான வேலை என்ற குறுகிய வட்டத்திற்குள் இருந்துவிட்டால், பிற்காலத்தில் பெரும் சவால்களை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும். எனவே, மாணவிகள் பெற்ற கல்வி அவர்களுக்கும், அவர்களின் பின்வரும் சந்ததியினருக்கும் பயன்படும் வகையிலான வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்றார் அவர்.விழாவுக்கு கல்லூரி ஆட்சிமன்றக் குழுத் தலைவர் முருகன் தலைமை வகித்தார். குழு பொருளாளர் கோபிநாதன் முன்னிலை வகித்தார். செயலாளர் ராமநாதன் வரவேற்றார். கல்லுôரி முதல்வர் சுஜாதா ஆண்டறிக்கை வாசித்தார்.விழாவில், ஆட்சிமன்றக் குழு நிர்வாகிகள், ரெட்டி கல்வி அறக்கட்ளை உறுப்பினர்கள், பேராசிரியைகள், மாணவிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாணவிகள் பேரவைத் தலைவி ராகினி நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai