சுடச்சுட

  

  திருச்சி உறையூர் அருள்மிகு கமலவல்லி நாச்சியார் திருக்கோயில் தெப்ப உற்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.
  ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயிலின் உபகோயிலாக விளங்கும் இக்கோயிலில் திருமங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப் பெற்றதாகவும், திருப்பாணாழ்வார் அவதரித்த திருத்தலமாகவும் விளங்கி வருகிறது.
  இத்திருக்கோயிலின் தெப்பத் திருநாள் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. தினமும் கருவறையிலிருந்து மாலை 6 மணிக்குப் புறப்பட்ட தாயார், தெப்ப மண்டபத்துக்குச் சென்று அலங்காரம் அமுது செய்தல், தீர்த்தகோஷ்டிக்குப் பின்னர் இரவு 7.45 மணி வரை  பொதுமக்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து 5 நாள்கள் இதுபோன்று தாயாரின் புறப்பாடு நடைபெற்றது. திருநாளின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி மாலை 5.30 மணிக்கு கருவறையிலிருந்து புறப்பட்ட கமலவல்லி நாச்சியார் தாயார், மாலை 5.45மணிக்கு தெப்ப மண்டபத்தை சென்றடைந்தார்.அலங்காரம் அமுது செய்தல், தீர்த்த கோஷ்டிக்குப் பின்னர், தெப்பத்தில் எழுந்தருளிய கமலவல்லி நாச்சியார் இரவு 7 மணி முதல் 8 மணி வரை தெப்பம் கண்டருளினார். மூன்று முறை தெப்பத்தில் வலம்வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த கமலவல்லி நாச்சியார், தெப்ப மண்டபத்தை அடைந்து அங்கிருந்து  இரவு 9 மணிக்கு ஆளும் பல்லக்கில் திருவீதியுலாவில் வலம் வந்து காட்சியளித்தார். இரவு 9.45 மணிக்கு தெப்ப மண்டபத்தை வந்தடைந்த தாயார், அங்கிருந்து இரவு 10 மணிக்குப் புறப்பட்டு கருவறையைச் சென்றடைந்தார். தெப்ப உற்சவத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று தாயாரைத் தரிசனம் செய்தனர்.
  இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை பந்தக்காட்சி மற்றும் தீர்த்தவாரி கண்டருளுதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai