Enable Javscript for better performance
தொட்டியத்தில் நடை சாத்தப்பட்ட கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்- Dinamani

சுடச்சுட

    

    தொட்டியத்தில் நடை சாத்தப்பட்ட கோயில் முன்பு பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்

    By DIN  |   Published on : 24th March 2017 06:39 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி மாவட்டம், தொட்டியம் ஸ்ரீ மதுரகாளியம்மன் கோயில் பங்குனி தேரோட்ட விழாவை முன்னிட்டு, கோயில் நடை சாத்தப்பட்டு, கோயில் வாசலில் பொங்கல் வைத்து வழிபடும் வைபவம் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
    இக்கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி திருத்தேர் திருவிழா நடப்பது வழக்கம். நிகழாண்டுக்கான விழா கடந்த 14-ம் தேதி தொடங்கியது. தொடர்ந்த விழா நாள்களில் பல்வேறு அமைப்புகள், ஊர்கள் சார்பில் அம்மனுக்கு பூச்சொரிதல் நிகழ்வு நடைபெற்று வந்தது. இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில், கடந்த 21-ம் தேதி நடைபெற்ற பூச்சொரிதலுக்கு பின்னர், அன்றிரவு கோயில் கதவு அடைக்கப்பட்டது.
    இதைத் தொடர்ந்து, புதன்கிழமை (மார்ச் 22) இரவு நடை சாத்தப்பட்ட கோயிலின் முன்பு பக்தர்கள் மற்றும் கோயில் நிர்வாகத்தின் சார்பில் ஆயிரம் பானையில் பொங்கலிட்டு, அதை அடைத்த கோயில் வாசல் கதவு முன்பு படையலிட்டு வழிபடும் நிகழ்வு நடைபெற்றது.
    திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேர் தலையலங்காரம் நிகழ்ச்சி வரும் 28-ம் தேதி இரவு நடைபெறுகிறது. தொடர்ந்து, ஒருவாரம் திருத்தேர் வீதியுலா நடைபெற்று, நிறைவில் வாணவேடிக்கை மற்றும் எருமை கிடா வெட்டும் நிகழ்வு நடைபெறும்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai