சுடச்சுட

    

    திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், பூலாங்குளத்துப்பட்டி, கீழ அம்மாபேட்டையைச் சேர்ந்த கூலுடையார் மனைவி பாப்பு (66). இவர் கடந்த நவம்பர் 24ஆம் தேதி திருவெள்ளறையில் உள்ள சுனை முருகன் கோயில் பகுதியில் கொலை செய்யப்பட்டார். அவர் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.
    இதுகுறித்து மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் அலாவுதீன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, கொலையாளிகள் தேடப்பட்டு வந்தனர்.
    இந்நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய ஸ்ரீரங்கம் வட்டம், கம்பரசம்பேட்டை மேலத்தெருவைச் சேர்ந்த சுகுமார் மகன் சுதாகர் (23), திருச்சி இ.பி. சாலை அந்தோணியார் கோயில் தெருவைச் சேர்ந்த அந்தோணிசாமி மகன் விஜய் (24), திருச்சி இ.பி. சாலை அண்ணா நகரைச் சேர்ந்த சுந்தரலிங்கம் மகன் கேசவன் (23) ஆகிய 3 பேரை கம்பரசம்பேட்டை பெரியார் நகர் பேருந்து நிறுத்தத்தில் போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர். வழக்கில் 4 மாதங்களுக்கு பிறகு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai