சுடச்சுட

    

    இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டவர் கைது: 13 வாகனங்கள் பறிமுதல்

    By DIN  |   Published on : 25th March 2017 06:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி  மாநகரில் கே.கே.நகர், கன்டோன்மென்ட், அமர்வு நீதிமன்றம், உறையூர், தில்லைநகர், கோட்டை காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதியில் இரு சக்கர வாகனங்கள் தொடர்ந்து திருட்டு போவதாக வந்த புகாரையடுத்து, மாநகரக் காவல் ஆணையர் ஏ. அருண் உத்தரவின்படி தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது.
    இந்நிலையில் தனிப்படை போலீஸாருக்கு வியாழக்கிழமை கிடைத்த தகவலின்படி, கே.கே.நகர் உடையான்பட்டி ரயில்வே கேட் அருகில் நின்றுகொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரித்தபோது, அவர் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டம், பூதங்குடியைச் சேர்ந்த ஆர். ரமேஷ் (46) என்பது தெரிய வந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில்  13 இரு சக்கர வாகனங்களை திருடியதை ஒப்புக் கொண்டார். இதையடுத்து 13 வாகனங்களை பறிமுதல் செய்த தனிப்படை போலீஸார், ரமேஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai