சுடச்சுட

  

  பாரம்பரியத்தை பேணி பாதுகாக்க கல்வி பயன்பட வேண்டும் என்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். பாஸ்கரன்.
  திருச்சி ஸ்ரீமதி இந்திராகாந்தி மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற கல்லூரி தினவிழாவில் பங்கேற்று அவர் மேலும் பேசியது:
  மனிதனுக்கு அடிப்படையானது கல்வி. உயர்நிலையை அடைய கல்வி அவசியம். நாம் கற்ற கல்வி சமுதாயத்தை உயர்த்தவும், நம் முன்னோர்களின் பெருமையையும், பாரம்பரியத்தையும் பேணி பாதுகாக்கவும் பயன்பட வேண்டும். வாழ்வில் சிறக்க உணர்வு, உறுதி, சுயக்கட்டுப்பாடு ஆகிய மூன்றும் தேவை. ஒரு செயலை செய்ய வேண்டும் என்ற உணர்வும், அதை முழுமையாகச் செய்யக் கூடிய உறுதியும், பல்வேறு திசைதிருப்பும் நிகழ்ச்சிகளில் சுயக்கட்டுப்பாடும் உங்களை வாழ்வில் உயர்த்தும்.
  வாழ்வில் முன்னேற உண்மையான நட்பு தேவை. உண்மையான நட்பு, பயன்பாடு நட்பு, கேளிக்கை நட்பு ஆகிய 3 நட்புகளில், உணர்வுகளை புரியவைத்து, திறமைகளை வெளிக்கொணரும் உண்மையான நட்பே தேவை. அப்படிபட்ட நண்பர்களை தேர்ந்தெடுத்து, நட்பு பாராட்ட வேண்டும். நண்பர்கள் நன்றாக அமைந்தால் எதிர்ப்புகளை சமாளித்து, சாதனை புரியலாம்.
  பெற்றோரையும், ஆசிரியரையும் மதிப்போர் சமுதாயத்தில் தாழ்ந்ததில்லை என்றார் நீதிபதி.
  தொடர்ந்து, கல்லூரியில் சிறப்பிடம் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினார்.
  முன்னதாக, கல்லூரிச் செயலர் எஸ். குஞ்சிதபாதம் வரவேற்றார். கல்லூரி முதல்வர் எஸ். வித்யாலட்சுமி ஆண்டறிக்கை வாசித்தார். பேராசிரியர்கள், மாணவிகள் பங்கேற்றனர். நிறைவில் துணை முதல்வர் எம். ரேமா நன்றி கூறினார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai