சுடச்சுட

  

  முசிறியில் வாடகை தராத பேரூராட்சி கடைகளின் மின் இணைப்பு துண்டிப்பு

  By DIN  |   Published on : 26th March 2017 01:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சி மாவட்டம், முசிறியில் வாடகை தராத பேரூராட்சி கடைகளின் மின் இணைப்பை துண்டித்து பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
  முசிறி புதிய பேருந்து நிலையத்தில் சுமார் 20-க்கும் மேற்பட்ட கடைகளை பேரூராட்சி நிர்வாகம் ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு கொடுத்துள்ளது. இந்நிலையில் நீண்ட காலமாக ரூ. 5 லட்சத்திற்கும் அதிகமாக வாடகை தராமல் உள்ள 7 கடைகளை பூட்ட பேரூராட்சி செயல் அலுவலர் நடவடிக்கை எடுத்தார்.
  கடை உரிமையாளர்கள் 2 நாட்களில் உரிய வாடகையை பேரூராட்சி அலுவலகத்தில் செலுத்தி விடுவதாக தெரிவித்ததை அடுத்து, முதல்கட்ட நடவடிக்கையாக வாடகை பாக்கியுள்ள 7 கடைகளின் மின் இணைப்பை துண்டித்து, மார்ச் 27-ம் தேதிக்குள் வாடகை செலுத்த வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai