சுடச்சுட

  

  திருச்சியில் வங்கி மேலாளர் வீட்டில் நகை, பணம் காணாமல் போனது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
  திருச்சி எடமலைப்பட்டிபுதூர் பிரதான சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 5-ஆவது மாடியில் வசிப்பவர் வெங்கட்ராமன் (34). உளுந்தூர்பேட்டையில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் மேலாளராகப் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி நித்யா. நித்யாவின் தாய் சீதாலட்சுமி. இவர் திருச்சியில் ரயில்வே துறை அதிகாரியாக உள்ளார்.
  கடந்த 22 ஆம் தேதி கணவன், மனைவி இருவரும் வெளியூர் சென்ற நிலையில், மாமியார் சீதாலட்சுமியும் வேலைநிமித்தமாக வெளியில் சென்றுவிட்டாராம். திரும்ப 24 ஆம் தேதி வீட்டுக்கு வந்து பார்த்தபோது, ஜன்னல் உடைக்கப்பட்ட நிலையில், வீட்டின் படுக்கையறையின் மேஜையில் வைக்கப்பட்டிருந்த 10 பவுன் நகைகள், ரூ. 5,000 ரொக்கத்தை காணவில்லையாம். இதுகுறித்து வெங்கட்ராமன் அளித்த புகாரின் பேரில், எடமலைப்பட்டிபுதூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai