சுடச்சுட

  

  திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 3-ஆவது வார பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  இக்கோயிலில் முதல்வார பூச்சொரிதல் விழா கடந்த 12-ஆம் தேதி நடைபெற்றது. இதையொட்டி கோயில் தேவஸ்தானம் சார்பிலும், பொதுமக்களும் ஏராளமான கூடைகளில் பூக்களை எடுத்து வந்து அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்தனர்.
  அதனைத் தொடர்ந்து 19-ஆம் தேதி இரண்டாவது வார பூச்சொரிதல் நடைபெற்றது. இந்நிலையில் மூன்றாவது வார பூச்சொரிதல் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.  இவ்விழாவில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்று அம்மனுக்கு பூக்களால் அபிஷேகம் செய்தனர்.
  இந்த புஷ்பாபிஷேகம் திங்கள்கிழமை அதிகாலை வரை தொடர்ந்து நடைபெற்றது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai