சுடச்சுட

  

  மணப்பாறையில் வீட்டருகே விளையாடிய 2 வயது சிறுவன் கடத்தல்

  By DIN  |   Published on : 27th March 2017 12:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சி மாவட்டம், மணப்பாறையில் ஞாயிற்றுக்கிழமை காலை வீட்டருகே விளையாடி கொண்டிருந்த 2 வயது சிறுவனை மர்ம நபர் தனது இரு சக்கர வாகனத்தில் கடத்திச் சென்றதாக காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
  மணப்பாறையைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம் - வசந்தா தம்பதி. இவர்களின் மகள் முத்துலட்சுமியின் 2 வயது மகன் சாய்தர்ஷன். இவன் ஞாயிற்றுக்கிழமை காலை மணப்பாறை அத்திக்குளம் தெருவில் உள்ள தனது பாட்டி வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது தலைக்கவசம் அணிந்த இளைஞர் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தில் சிறுவனைக் கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து மணப்பாறை போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். மேலும் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நடராஜன், மணப்பாறை துணைக் கண்காணிப்பாளர் வனிதா தலைமையில் 4 தனிப்படைகள் அமைத்து சிறுவனை தேடிவருகின்றனர்.  
  சிறுவனின் பெற்றோர் முத்துலட்சுமி - பிரகாஷ், திருச்சி கோட்டை அரபிக்குளத் தெருவில் வசித்து வருகின்றனர். சிறுவன் பாட்டி வீட்டுக்கு சென்றிருந்த நிலையில், இந்த கடத்தல் சம்பவம் நடந்துள்ளது. சிறுவனின் பாட்டி வசந்தா சென்னை ஜார்ஜ் டவுன் நீதிமன்ற நீதிபதி வடிவேலின் சகோதரி ஆவார்.
  பட்டப்பகலில் வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் கடத்தப்பட்ட சம்பவம் மணப்பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai