சுடச்சுட

    

    முசிறி அருகே மணல் லாரிகளை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

    By DIN  |   Published on : 27th March 2017 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முசிறி அருகே திருஈங்கோய்மலை பகுதியில் செயல்பட்டு வரும் இரண்டாம் நிலை மணல் விற்பனை நிலையத்திற்கு மணல் ஏற்ற வரும் மணல் லாரிகளை திருஈங்கோய்மலை பகுதி மணல் லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஞாயிற்றுக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    தொட்டியம் ஒன்றியத்திற்கு உட்பட்ட முள்ளிப்பாடி ஊராட்சி திருஈங்கோய்மலை பகுதியில் இயங்கி வரும் இரண்டாம் நிலை மணல் விற்பனை செய்யும் குவாரியில் உள்ளூர் பகுதியில் உள்ள மணல் லாரிகளுக்கு முன்னுரிமை வழங்குமாறு அப்பகுதி மணல் லாரி உரிமையாளர்கள் குவாரி நிர்வாகத்தினரிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து குவாரி நிர்வாகம், சொந்தமாக லாரி வைத்திருப்பவர்களுக்கு மட்டும் அனுமதி தரப்படும் எனக் கூறியதாம்.
    இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி லாரி உரிமையாளர்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் இரண்டாம் நிலை மணல் விற்பனை நிலையத்திற்கு மணல் ஏற்ற வந்த லாரிகளை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த தொட்டியம் போலீஸார் போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, குவாரி நிர்வாகத்திடம் பேசி கோரிக்கையை நிறைவேற்றுவதாக தெரிவித்ததையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai