சுடச்சுட

  

  மதுரை பேராசிரியர் கொலை வழக்கு: உறவினர் உள்பட இருவர் சரண்

  By DIN  |   Published on : 29th March 2017 12:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சி மாவட்டத்தில் மதுரை பேராசிரியர் தலை துண்டித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் உறவினர் உள்பட இருவர் திருச்சி நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர்.
  திருச்சி மாவட்டம், முசிறி சிட்டிலரை ஏரிக்குள் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் 45 வயதுள்ளவர் இறந்து கிடந்தார். அந்த உடலையும், அருகிலிருந்த காரையும் கைப்பற்றி முசிறி போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், இறந்தவர் மதுரை ஏ.ஆர். தோப்பு ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா (65) என்பதும், இவர், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் என்பதும் தெரியவந்தது.
  இதுகுறித்து முசிறி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனர்.இந்நிலையில், கொலையானவரின் உறவினரும், கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் கோவைபுரம் குடித்தெரு பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் அமல்ராஜ் (38), இவரது கூட்டாளியும், கிருஷ்ணராயபுரம் திருக்காப்புலியூர் பழனியப்பன் மகனுமான கார்த்திகேயன் (27) ஆகிய இருவர் திருச்சி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 5-இல் நீதிபதி நாகப்பன் முன்னிலையில் செவ்வாய்க்கிழமை சரணடைந்தனர்.
  இவர்களை 15 நாள்கள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து இவர்கள் திருச்சி நீதிமன்றத்தில் அடைக்கப்பட்டனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai