சுடச்சுட

    

    திருச்சி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இருவர் புதன்கிழமை உயிரிழந்தனர்.
    திருச்சி மாவட்டம் அல்லூர் கீழத்தெருவைச் சேர்ந்த காசி மகன் ராஜேந்திரன் (50). மாட்டுவண்டி வைத்து தொழில் செய்து வந்தார். இவரது நண்பரும், அதே பகுதியைச் சேர்ந்தவருமான தங்கையா மகன் சுப்ரமணி (42).
    இவர் அல்லூர் ஊராட்சி துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றி வந்தார்.
    இருவரும் வேலைநிமித்தமாக அல்லூரிலிருந்து ஜீயபுரம் நோக்கி இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை மாலை கிளம்பினர். இவர்களது வாகனம் திருச்செந்துறை சிவன் கோயில் வளைவில் திரும்ப முயன்ற போது, எதிரே கரூரிலிருந்து திருச்சி நோக்கி வந்த பெட்ரோல் டேங்கர் லாரி, இவர்களது வாகனத்தின் மீது மோதியது.
     லாரி மோதியதில் தூக்கி வீசப்பட்ட இருவரும், சிவன் கோயில் சுற்றுச்சுவரில் மோதி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.
    தகவலறிந்த வந்த போலீஸார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததனர். இதுகுறித்து ஜீயபுரம் போலீஸார் வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான லாரி ஓட்டுநரும், விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி பகுதியைச் சேர்ந்த கொளஞ்சி மகனுமான பூபாலன் (27) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai