Enable Javscript for better performance
திருச்சி அருகே வாழைப்பழ வியாபாரி குத்திக்கொலை: இருவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    திருச்சி அருகே வாழைப்பழ வியாபாரி குத்திக்கொலை: இருவர் கைது

    By DIN  |   Published on : 30th March 2017 06:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருச்சி மாவட்டம் தொட்டியத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முன்விரோதம் காரணமாக வாழைப்பழ வியாபாரி குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொட்டியம் போலீஸார் இருவரை கைது செய்தனர்.
    தொட்டியம் மதுரைகாளியம்மன் கோயில் பங்குனி தேர் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர் அலங்கார நிகழ்வு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. அப்போது பொதுமக்கள் தேருக்கு மாலை அணிவித்து வழிபடுவர்.
    இதையொட்டி தொட்டியம் மேலத்தெருவைச் சேர்ந்த பொதுமக்கள் மாலைகளை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்தனர். வானப்பட்டறை அருகே வந்தபோது, அப்பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகனும், வாழைப்பழ வியாபாரியுமான வீரபாண்டி (23) என்பவருக்கும், அரியனாம்பேட்டை சேர்ந்த பழனியாண்டி மகன் சங்கீத்குமார் (22), தொட்டியத்தை சேர்ந்த விஜி ஆகியோரிடையே முன்விரோதம் காரணமாக தகராறு ஏற்பட்டது.
    இதில் கோபமடைந்த சங்கீத்குமார் வீரபாண்டியை கத்தியால் குத்தினாராம்.
    பலத்த காயமடைந்த வீரபாண்டி மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார்.
    இதுகுறித்து வழக்குப் பதிந்த தொட்டியம் போலீஸார் சங்கீத்குமார் மற்றும் சங்கீத்குமாரின் நண்பர் விஜி ஆகிய இருவரையும் புதன்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai