சுடச்சுட

    

    திருச்சி விமான நிலையத்தில் ரூ. 2.36 லட்சம் தங்கம் பறிமுதல்

    By DIN  |   Published on : 30th March 2017 06:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மலேசியாவிலிருந்து கடத்தி வந்த ரூ. 2.36 லட்சம் தங்கத்தை திருச்சி விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
    மலேசியா தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சிக்கு ஏர் ஏசியா விமானம் புதன்கிழமை காலை வந்தது. அதில் வந்த பயணிகளின் உடைமைகள் மற்றும் பயணிகளை, சுங்கத் துறையினர் சோதனை செய்தனர். இதில் மலேசியா குடியுரிமை பெற்ற பன்டரினாச்சிங், ஜலால் பகுதியைச் சேர்ந்த க. சந்திரன் என்பவர் ரூ. 2.36 லட்சம் மதிப்புள்ள 79.5 கிராம் தங்க நகையை தனது உடைமைகளுக்குள் மறைத்து கொண்டு வந்தது தெரியவந்தது.
    இதனையடுத்து அவற்றை சுங்கத் துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai