சுடச்சுட

  

  திருவானைக்கா கோயிலுக்கு ரூ. 1.50 லட்சத்தில் புதிய சேஷ வாகனம்

  By DIN  |   Published on : 30th March 2017 06:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருவானைக்கா அருள்மிகு சம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோயிலுக்கு ரூ. 1.50 லட்சம் மதிப்பில் செய்யப்பட்ட புதிய உற்சவ சேஷ வாகனத்தை பக்தர் ஒருவர் உபயமாக திங்கள்கிழமை வழங்கினார்.
  பஞ்சப்பூத திருத்தலங்களில் நீர்த்தலமாக விளங்கக் கூடிய திருவானைக்கா கோயிலில் தை, பங்குனி மாதத்தில் நடைபெறும் விழாக்களின் போது அம்மன் ஐந்து தலை நாகம் கொண்ட சேஷ வாகனத்தில் எழுந்தருளுவார். இந்த வாகனம்
  பழுது அடைந்ததைத் தொடர்ந்து ஸ்ரீரங்கம் பகுதியை சேர்ந்த ஸ்ரீ சீனிவாசன் விஜயராஜா குடும்பத்தினர் ரூ. 1.50 லட்சத்தில் புதிய சேஷ வாகனத்தை கோயிலுக்கு வழங்கினர்.
  பாபநாசத்தில் உள்ள சிற்ப கலைக்கூடத்தில் செய்யப்பட்ட இந்த சேஷ வாகனம் இலுப்பை மரத்தில் சுமார் 9 அடி உயரத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. படம் எடுக்கும் ஐந்து தலை நாகம் சுருண்டு ஆமையின் மேல் அமர்ந்திருப்பது போல் செதுக்கப்பட்டுள்ளது.
  அதனுடைய பீடத்தில் எட்டுத்திக்கும் பார்க்கும் வண்ணம் 8 யானைகள், 8 நாகங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளது. அழகிய வடிவமைப்புடன் செய்யப்பட்டுள்ள இந்த சேஷ வாகனம் முறைப்படி கோயில் உதவி ஆணையர் கோ. ஜெயப்பிரியாவிடம் புதன்கிழமை வழங்கப்பட்டது.  இந்த புதிய சேஷவாகனத்தில் வெள்ளிக்கிழமை அம்மன் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai