சுடச்சுட

    

    கொல்லப்பட்ட மதுரை பேராசிரியரின் தலை மீட்பு: 2 பேர் கைது

    By DIN  |   Published on : 31st March 2017 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முசிறியில் கொல்லப்பட்ட மதுரை பேராசிரியரின் துண்டிக்கப்பட்ட தலையை போலீஸார் மீட்டனர். இந்த வழக்கு தொடர்பாக 2 பேர் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனர்.
    மதுரையைச் சேர்ந்த ஓய்வு பெற்ற பேராசிரியர் கிருஷ்ணா தலை துண்டிக்கப்பட்ட நிலையில், திருச்சி மாவட்டம், முசிறி அருகேயுள்ள சிட்டிலரை ஏரியில் கடந்த 25-ம் தேதி சடலமாகக் கிடந்தார். முசிறி போலீஸார் வழக்குப் பதிந்து பேராசிரியரின் துண்டிக்கப்பட்ட தலையை தேடி வந்தனர்.
    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கரூர் மாவட்டம் கோவக்குளத்தை சேர்ந்த தங்கவேல் மகன் கோபாலகிருஷ்ணன் (21) மற்றும் பணிக்கம்பட்டியை சேர்ந்த பழனிச்சாமி மகன் கோபி (30) ஆகியோர் திருச்சி நீதிமன்றத்தில் கடந்த 28}ஆம் தேதி சரணடைந்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணை யில் பேராசிரியரின் தலையை சேலம் மாவட்டம் மல்லூரில் பாலத்தின் அடியில் முள்புதரில் வீசியதாக கூறினர். இயதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீஸார், பேராசிரியரின் தலையை கொண்டு வந்தனர். கோபி மற்றும் கோபாலகிருஷ்ணனையும் கைது செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai