சுடச்சுட

  

  மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்டரூ.2.06 லட்சம் மதிப்புள்ள நகை பறிமுதல்

  By DIN  |   Published on : 31st March 2017 07:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மலேசியாவிலிருந்து கடத்தி வரப்பட்ட ரூ. 2.06 லட்சம் மதிப்புள்ள தங்க நகைகள் திருச்சி விமான நிலையத்தில் வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
  மலேசியாவிலிருந்து புதன்கிழமை நள்ளிரவு திருச்சி வந்த ஏர் ஏசியா விமான பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சுங்கத் துறை அதிகாரிகள் பரிசோதனை செய்தனர். இதில், மலேசியாவிலிருந்து வந்த நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகேயுள்ள துளசியாப்பட்டினம் வண்டுவாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மு. ஷெரிப் என்பவர், தனது உடைமைகளுக்குள் மறைத்து ரூ. 2.06 லட்சம் மதிப்புள்ள 70 கிராம் தங்க நகைகளை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவற்றை சுங்கத்துறையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai