சுடச்சுட

  

  வரி கட்டாதவர் வீட்டின் முன் குப்பைத் தொட்டி : மணப்பாறை நகராட்சி நடவடிக்கை

  By DIN  |   Published on : 31st March 2017 07:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  திருச்சி மாவட்டம், மணப்பாறையில் சொத்துவரி செலுத்தாதவர் வீட்டின் முன் குப்பைகளுடன் குப்பைத் தொட்டியை வைத்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
  மணப்பாறை நகராட்சியில் குடிநீர் வரி, சொத்து வரி நிலுவைகளை பொதுமக்கள் அதிக அளவில் வைத்திருப்பதால் நகராட்சி ஆணையர் பாப்பம்மாளே அதிகாரிகளுடன் நேரில் சென்று வரிவசூல் செய்து வருகிறார்.
  இந்நிலையில், அகமது சரீப் தெருவில் குடியிருக்கும் பாலன் மற்றும் கிருஷ்ணன் ஆகிய சகோதரர்கள் 2009-ஆம் ஆண்டு முதல் கடந்த 9 ஆண்டுகளாக சொத்து வரியினை செலுத்தாமல் நிலுவைத் தொகையாக 68,918 ரூபாய் வைத்திருப்பதாகவும், வரி கட்ட பாலன் மற்றும் கிருஷ்ணன் மறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது.
  இதையடுத்து, நகராட்சி ஆணையர் பாப்பம்மாள் உத்தரவின் பேரில், நகராட்சி பொறியாளர் மனோகர், மேலாளர் முத்துகுமார், துப்புரவு ஆய்வாளர் தீபன் சக்கரவர்த்தி ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் வியாழக்கிழமை காலை பாலன் வீட்டிற்கு சென்று வரி நிலுவைத் தொகையினை கேட்டனர். வரி கட்ட மறுக்கவே,
  குப்பைகளுடனான குப்பைத் தொட்டி ஒன்றை பாலன் வீட்டின் முன்பு நகராட்சி நிர்வாகத்தினர் வைத்தனர். வரி செலுத்தும்வரை குப்பைத் தொட்டி இங்குதான் இருக்கும் என்றும் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
  வழக்கு தொடருவேன்: இதுகுறித்து பாலன் தரப்பில் கேட்டபோது, தான் வரி கட்ட தயாராக இருப்பதாகவும், 10 சதவீதம் வரியை குறைத்து தர பலமுறை ஆணையரிடம் கேட்டும் அவர்கள் மறுத்து வருகின்றனர்.
  ஊரில் பலர் லட்சக்கணக்கில் வரிபாக்கி வைத்திருக்கும் நிலையில் தற்போது தன்னை அவமானப்படுத்தவே இவ்வாறு குப்பைத் தொட்டியை வீட்டின் முன் வைத்துள்ளனர்.
  இதுகுறித்து வழக்கு தொடருவேன் என்றார் அவர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai