சுடச்சுட

  

  திருச்சி மேலரண் சாலையில் போத்தீஸ் நிறுவனத்தின் புதிய கிளை திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
  விழாவில் போத்தீஸ் நிறுவன உரிமையாளர்களான சடையாண்டி மூப்பனார் - வேலம்மாள் தம்பதியினர் கடையை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தனர். போத்தீஸ் நிர்வாக இயக்குநர்கள் எஸ்.ரமேஷ், எஸ். போத்திராஜ், எஸ். மகேஷ், எஸ். அசோக், எஸ். முருகேசன் குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
  ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடங்கப்பட்ட போத்தீஸ் ஜவுளி நிறுவனம், நெல்லை, சென்னை, மதுரை, கோவை, புதுச்சேரி, திருவனந்தபுரம், நாகர்கோவிலை தொடர்ந்து தற்போது திருச்சியில் தனது 13-ஆவது கிளையைத் தொடங்கியுள்ளது. திருச்சியில் 5 தளங்களுடன் அமைக்கப்பட்டிருக்கும் போத்தீஸ் ஜவுளி நிறுவனத்தில் பெண்களுக்கான பேன்சி புடவைகள், டிசைனர் புடவைகள், பட்டுப்புடவைகள், சுடிதார், ரெடிமேட் ரகங்கள் என ஏராளமான ரகங்கள் உள்ளன. பட்டுப்புடவைக்கு எனத் தனிப் பிரிவும் உள்ளது. இதில் பிரத்யேக சாமுத்ரிகா, வஸ்திரகலா, வசுந்தரா, பரம்பரா உள்ளிட்ட பல ரகங்களில் பட்டுப்புடவைகள் விற்பனைக்கு உள்ளன.
  ஆண்களுக்கான தனிப்பிரிவு, வேஷ்டி, கைலிகளுக்கான தனிப்பிரிவு, குழந்தைகள், வளரிளம் பெண்களுக்கான தனிப்பிரிவுகளும் உள்ளன. வாடிக்கையாளர்களுக்கு கிரீன் கார்டு திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  கடையின் கீழ்தளத்தில் கார் பார்க்கிங் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. கடை தொடங்கிய முதல்நாளே ஆயிரக்கணக்கான மக்கள் ஜவுளிகளை வாங்கிச் சென்றனர்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai