சுடச்சுட

  

  இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் சங்கிலி பறிப்பு

  By DIN  |   Published on : 04th May 2017 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மணப்பாறை அடுத்த சந்தியாகுபுரம் பகுதியில் கணவனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற பெண்ணிடம் 3 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
  மணப்பாறை அடுத்த பொய்கைபட்டி ஊராட்சி புதுப்பட்டியை சேர்ந்தவர் ஆரோக்கியம் மகன் மரியசூசை (27). மினிபேருந்து நடத்துநர். இவர் தனது மனைவி சுகன்யா (23) மற்றும் 3 வயது மகனுடன் புதன்கிழமை இருசக்கர வாகனத்தில் மணப்பாறை வந்துவிட்டு மாலையில் வீட்டுக்கு திரும்பியுள்ளனர். சந்தியாகுபுரம் பகுதியில் சென்றபோது, பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் சுகன்யா கழுத்தில் இருந்த 3 பவுன் தாலி சங்கிலியை பறித்து கொண்டு தப்பினர். இதில் நிலைதடுமாறிய சுகன்யா மற்றும் மரியசூசை கீழே விழுந்தனர். இதுகுறித்து மணப்பாறை போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

   

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai