சுடச்சுட

    

    தற்போது விற்பனை செய்யும் இடத்திலேயே முறைப்படுத்தி தரைக்கடை வியாபாரிகள் வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சியில் தரைக்கடை வியாபாரிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    சாலையோர வியாபாரிகள் அனைவரையும் முழுமையாக கணக்கெடுத்து அடையாள அட்டை வழங்கிய பின்பு வியாபார குழுவிற்கான தேர்தலை நடத்த வேண்டும். நகர வியாபாரக்குழுவில் 15 பேரில் 6 பேர் சாலையோர வியாபாரிகள் என்பதை 3இல் 2 பங்கு என அரசாணையை திருத்தம் செய்ய வேண்டும்.
    சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் கூட்டுறவு வங்கிகள் மூலம் கடன் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  ஆட்சியர் அலுவலகம் சார்பில் திருச்சி மாவட்டப் பொதுத் தொழிலாளர் சங்கம் (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    ஆர்ப்பாட்டத்திற்கு தரைக்கடை வியாபாரிகள் சங்க மாவட்டப் பொருளாளர் மணிகண்டன் தலைமை வகித்தார். பொதுதொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் செல்வி, சிஐடியு மாவட்ட செயலாளர் சம்பத், மாவட்ட தலைவர் ரெங்கராஜன், மாவட்ட துணைத் தலைவர் வீரமுத்து, பொருளாளர் ராஜேந்திரன் ஆகியோர் பேசினர்.
    ஆர்ப்பாட்டத்தில் தரைக்கடை, தள்ளுவண்டி வியாபாரிகள் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai