சுடச்சுட

  

  நாணயங்களை பெற வங்கி மறுப்பதால் ரூ.34 லட்சம் தேக்கம்: தனியார் பால் நிறுவனம் புகார்

  By DIN  |   Published on : 04th May 2017 07:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நாணயங்களை வாங்க வங்கி நிர்வாகம் மறுப்பதால் ரூ. 34 லட்சம் தேக்கமடைந்து தொழில் பாதிக்கப்பட்டுள்ளது என தனியார் பால் உற்பத்தி நிறுவனம் புகார் தெரிவித்துள்ளது.
  இதுகுறித்து விஜய் பால் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சோமசுந்தரம் திருச்சியில் புதன்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் மேலும் தெரிவித்தது:
  விஜய் பால் நிறுவனம் நேரடியாக விவசாயிகளிடமிருந்தும், கிராமப்புற பால் விநியோகஸ்தர்களிடமிருந்தும் பாலை கொள்முதல் செய்கிறது. அவ்வாறு கொள்முதல் செய்யப்படும் பாலை பதப்படுத்தி, பால் மற்றும் பால் பொருள்களாக சிறு மற்றும் குறு வணிகம் மூலம் கடைகள் வாயிலாக விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில் விற்பனை செய்யும்போது கிராமப்புறங்களில் கடைகள் மூலமாக வரும் வருவாயில் பெருமளவு நாணயங்கள் வருகின்றன. அந்த வகையில் கடந்த 4 மாதங்களில் ரூ. 35 லட்சம் மதிப்பிலான நாணயங்கள் எங்களிடம் தேங்கியுள்ளன. அவற்றை வங்கியில் செலுத்தினால் எங்களது நிறுவனம் கணக்கு வைத்துள்ள மண்ணச்சநல்லூர் தனியார் (ஆக்சிஸ்) வங்கியில் நாணயங்களை வைக்க இடமில்லை மற்றும் அவற்றை எண்ண ஆள் இல்லை என்ற காரணங்களை சுட்டிக் காட்டி நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். இதுகுறித்து மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் தொடுக்கப்பட்ட வழக்கில், நீதிமன்றம் வங்கியின் செயல்பாட்டுக்கு இடைக்கால தடை விதித்தது.
  அதுகுறித்த நீதிமன்ற ஆணையைக் காண்பித்ததும் ரூ. 1 லட்சம் மதிப்பிலான 10 ரூபாய் நாணயங்களை மட்டும் வாங்கிக் கொண்டனர். மீதமுள்ள 34 லட்சம் மதிப்புள்ள நாணயங்களை  வாங்க வங்கி நிர்வாகம் மறுத்து வருகிறது. இதனால் எங்களது வணிகம் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

   

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai