சுடச்சுட

    

    உள்ளாட்சித் தேர்தலுக்கான அடிப்படை பணிகள் 90% நிறைவு பெற்றுள்ளதாகவும், இதரப் பணிகள் இந்த மாத இறுதிக்குள் முடிவடையும் என்றார் மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான்.
    திருச்சி ஆட்சியரகத்தில் வியாழக்கிழமை உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் குறித்து, திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த வளர்ச்சித் துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடத்திய பின்னர், அவர் அளித்த பேட்டி:
    2017, ஜனவரி 5 ஆம் தேதி தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் இறுதிப் பட்டியலின் அடிப்படையில் உள்ளாட்சித் தேர்தலுக்கான புகைப்படத்துடன் கூடிய வார்டு வாரியான வாக்காளர் பட்டியல் தயாரிப்புப் பணி, வாக்குச்சாவடி பட்டியல் சரிபார்ப்பு மற்றும் மாற்றம், தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர், அதன் காலிப்பணியிடங்கள் மற்றும் தேர்தல் தொடர்பாக மாவட்டங்களுக்கான தேவை குறித்து கேட்டறியப்பட்டு வருகிறது.
    அனைத்து மாவட்டங்களிலும் இப்பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கான அடிப்படை பணிகள் 90 சதவிகிதம் முடிக்கப்பட்டுள்ளது. வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல் தயாரிப்பு, வாக்குச்சாவடி பட்டியல் மாற்றம் உள்ளிட்ட இதரப் பணிகளும் இம்மாத இறுதிக்குள் முடிவடையும்.
    கடந்தாண்டு அறிவிக்கப்பட்ட உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்த வேட்பாளர்களின் வைப்புத் தொகை திரும்ப வழங்கப்பட்டு வருகிறது. மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் 100% வேட்பாளர்கள் வைப்புத் தொகையை திரும்பப் பெற்றுள்ளனர்.
    கிராமப்புற பகுதிகளில் வைப்புத் தொகை குறைவாக இருப்பதால், அவர்கள் திரும்ப பெற முன் வரவில்லை. எனினும், அவர்களுக்கு தகவல் அ
    ளித்து திரும்ப பெற்றுக்கொள்ள தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டு வருகிறது என்றார் மாலிக் பெரோஸ்கான்.
    முன்னதாக, திருச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் உள்ளாட்சி சாதாரண தேர்தல் தொடர்பான பணிகள் குறித்து மாநிலத் தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கானிடம் ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி விளக்கிக் கூறினார்.
    கூட்டத்தில், ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) மோகன் மற்றும் திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களை சேர்ந்த வளர்ச்சித்துறை அலுவலர்கள்  பங்கேற்றனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai