சுடச்சுட

  

  தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்ட சிங்கப்பூர் விமானம் புறப்படுவதில் மேலும் தாமதமானது. இதைத்தொடர்ந்து மாற்று ஏற்பாடு மூலம் பயணிகள் வெள்ளிக்கிழமை இரவு அனுப்பி வைக்கப்பட்டனர்.
  சிங்கப்பூர் - திருச்சி இடையே இயக்கப்படுவது டைகர் ஏர்வேஸ் விமானம். வியாழக்கிழமை இரவு 9.30 மணிக்கு திருச்சி வந்த இந்த விமானம், 10.30-க்கு புறப்பட வேண்டும். ஆனால், விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு இருப்பது தெரியவந்தது. இதை சரிசெய்ய முடியாததால், பயணிகள் 174 பேரும் விடுதியில் தங்கவைக்கப்பட்டனர்.
  இதற்கிடையே வெள்ளிக்கிழமை பகல் முழுவதும் பழுது சரிசெய்யப்படாததால், சிங்கப்பூரிலிருந்து தொழில்நுட்ப வல்லுநர்களுடன் உதிரிபாகம் ஆகியன மாற்று விமானம் மூலம் வெள்ளிக்கிழமை மாலை வந்துசேர்ந்தன. பிறகு, அந்த விமானத்திலேயே பயணிகள் 174 பேரும் இரவு 7.15 மணிக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.  தொழில்நுட்பக் கோளாறு சரிசெய்யப்பட்ட பிறகு வெள்ளிக்கிழமை இரவு விமானம் புறப்பட்டுச் செல்லும் என அறிவிக்கப்பட்டது.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai