சுடச்சுட

    

    துறையூர் உதவி தொடக்க கல்வி அலுவலகம் முன் சனிக்கிழமை தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
    சங்கத்தின் திருச்சி மாவட்ட செயலர் வை. விஜயகுமார் தலைமை வகித்தார். மாநில அமைப்பு செயலர் க. வெங்கட்ராமன், திருச்சி மாவட்ட தலைவர் ந. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
    ஆர்ப்பாட்டத்தின்போது துறையூர் ஒன்றிய கூடுதல் உதவித் தொடக்க கல்வி அலுவலர் பகுதி 2-க்கு உள்பட்ட அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு ஏப்ரல் மாதம் ஊதியத்தை பெற்றுத் தர மற்றும் ஏப்ரல் மாத குறைதீர் நாளில் ஆசிரியர்கள் வழங்கிய விண்ணப்பத்தின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், ஆசிரியர்கள் ஊதியம் தாமதமாவது குறித்து உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்கள் விசாரித்தபோது பொறுப்பற்று பேசும் அலுவலர்களை கண்டித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர்கள் பேசினர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai