Enable Javscript for better performance
துறையூர் அருகேடாஸ்மாக் கடை முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    துறையூர் அருகே புடலாத்தியில் டாஸ்மாக் கடையை கிராம மக்கள் சனிக்கிழமை முற்றுகையிட்டனர்.
    ஒக்கரை ஊராட்சியைச் சேர்ந்த புடலாத்தி கிராமத்தில் அண்மையில் புதிதாக அரசு மதுபானக் கடை திறக்கப்பட்டது. இதற்கு அந்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து இரண்டு முறை முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர்.
    இதையடுத்து, துறையூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் எஸ். சந்திரகுமார் தலைமையில் 2 முறை அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால், சுமூக தீர்வு எட்டப்படவில்லை.
    இந்நிலையில், சனிக்கிழமை புடலாத்தி டாஸ்மாக் கடை முன் திரண்ட கிராம மக்கள் கடையை முற்றுகையிட்டு அங்கிருந்த மதுபாட்டில்களை அகற்ற முயன்றனர்.
    தகவலறிந்து அங்கு சென்ற உப்பிலியபுரம் காவல் துறையினர் புடலாத்தியிலிருந்து விரைவில் டாஸ்மாக் கடையை அகற்றும் வரை இந்தக் கடை திறக்கப்படாது என்று கூறியதைத் தொடர்ந்து  கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு சென்றனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai